மீன்பிடியில் ஈடுபட்ட 20 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 20 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இருபது பேர் இர ண்டு இழுவை படகுகளில் நேற்று (01) இரவு பருத்தித்துறை கடற்பரப்பி ற்குள் அத்து மீறி நுழைத்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இவ ர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்த மீனவர்கள் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணையின் பின்னர் மீனவர்களை யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.