செப்டெம்பரில் ஐ.நா.செயற்குழுவின் விவரிப்பு!
இலங்கைக்கு விஜயமாகியிருந்த தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் இலங்கை விவரிப்பு அறிக்கை எதிர்வரும் 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும் இலங்கையில் தடுத்து வைக் கும் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம், பொறுப்புக்கூறல் பொறிமுறை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பரிந்துரைகளை இவ்வறி க்கையில் ஐக்கிய நாடுகள் செயற்குழு முன்வைக்குமென எதிர்பார்க்கப்படுகி ன்றது.
மேலும் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் உறுப்பின ர்கள் இலங்கையானது பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டுமென மனித சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவி க்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொலிஸ் நிலையங்களில் சட்டத்தரணி பிரசன்னமின்றி தடுத்துவைக்கப்பட்டோரை அதிகாரிகள் விசாரணை செய்யும் விடயம் தொடர்பில் கவலையடைவதாக ஐ.நா. செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும் சித்திரவதைகளுக்கு எதிரான சாசனத்தின் கட்டுப்பாடுகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்றும் தன்னிச்சையாக தடுத்து வைத்தலுக்கு எதிரான ஐ.நா. செயற்குழு அறிவித்துள்ளது.
இதே வேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது.