" போர்க் குற்றங்கள் இடம்பெறவில்லையென" நன்றிக் கடிதம் அனுப்பியதாக - உதய கம்மன்பில
இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெறவில்லையென பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய நெஸ்பி பிரபுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசியமான முறையில் நன்றிக் கடிதம் அனுப்பியதாக கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விவரித்துள்ளார்.
இறுதிப் போரில் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டது போல 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லையென வும் இறுதிப் போரில் 7000 தொடக்கம் 8000 வரையான மக்களே கொல்லப்பட்டதாகவும், அவர்களில் கால்வாசிப் பேர் சாதாரண உடையில் இருந்த புலி கள் எனவும் கடந்த ஒக்டோபர் மாதம் பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய போது, நெஸ்பி பிரபு கூறியிருந்தார்.
இந்த நிலையில், அரசுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட நெஸ்பி பிரபுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் என தமிழ் பிரிவினை வாதிகளின் அழுத்தங்களால் அந்தக் கடிதம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிவிவகாரச் செயலரின் இணைப்புக் கடிதத்தில், ஜனாதிபதியின் கடிதத்தின் உள்ளடக்கம் இலங்கை அல்லது பிரித்தானிய ஊடகங்க ளுக்குப் பகிரப்படக் கூடாதென தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.