Breaking News

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் ஆக் ஷன் அவதாரம் !

பிரபல நடிகை திரிஷா தமிழி பல படங்கள் நடித்துள்ளார், இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து முன்னணி நடிகையாக திகழ்பவர்.

இவர் பல படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தவர். இவரும் கேரளாவை சேர்ந்த நடிகை தான். இவ ருக்கு இருமுறை திருமணம் நிச்சயி க்கப்பட்டு நின்று விட்டது. இவர் தற்போது, துாங்காவனம் படத்தில், அதிரடி நாயகியாக நடித்து, பலரையும் கவர்ந்துள்ளார். சற்று இடைவெளிக்கு பின், மீண்டும் ஆக் ஷன் அவதாரத்தை கையில் எடுத்துள்ளார்.  கர்ஜனை என்ற படத்தில், மிகவும் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் நடித்து, படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளாராம். மேலும், அறம் படத்தில் நயன்தாராவின் நடிப்பு க்கு, பாராட்டுகள் குவிந்துள்ளதை அடுத்து, த்ரிஷா போன்ற, சீனியர் நடிகைய ரும், வித்தியாசமான வேடங்களில் நடிக்க தீர்மானம் எடுத்துள்ளனர். 

அதன் வெளிப்பாடு தான், கர்ஜனை படத்துக்காக, த்ரிஷா எடுத்துள்ள ஆக் ஷன் அவதாரம். ஐந்து நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து, இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, அதை படமாக்கி, சமூக வலைதளங்களில் பேரம் பேசி விற்பது தான், படத்தின் மையக் கருவாம். 

இவர் இனி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக கவனம் எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.