Breaking News

சிவமோகனின் செயற்பாட்டாளர் வீட்டில் தடுத்து வைக்கப்பட்டேன் - பெண் வேட்பாளர் !

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிர தேச சபையில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோக னின் செயற்பாட்டாளர் ஒருவர் வீட்டி ல் தன்னை தடுத்து வைத்ததாக அச்சு றுத்தலுக்கு இலக்காகிய பெண் வேட்  பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். 

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்த லில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் புளட் அமைப்பின் சார்பாக இளங்கோபுரம் விசுவமடுவினை சேர்ந்த மஞ்சுளா என்பவர் போட்டியிடவுள்ளார். இந்த நிலையில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கட்சி அலுவல கத்தில் நேற்றைய தினம் வேட்பாளர் கையெழுத்திடச் சென்ற போது தன்னை தடுத்து வைத்ததாக குறித்த பெண் வேட்பாளர் இன்று காலை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

வழக்கு பதிவு செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ள அதேவேளை பெண் வேட்பாளரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் மருத்துவ அறிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது தொடர்பாக தீர்மானிக்க ப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்தோடு பெண் வேட்பாளரை தடுத்து வைத்திருந்தவர் உயிர் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பின்மை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.