யாழில் இது இல்லையா.? : கேள்வி எழுப்பும் ஞானசார தேரர்
யாழ். நாக விகாரையின் முன்னாள் விகாராதிபதி மேகாஜதுரே ஜானாத்தன தேரர் உயிரிழந்ததையடுத்து அவரது பூதவுடலை தகனம் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் இடம் வழங்க மறுத்துள்ளனர்.
நீதிமன்றம் வரை இந்தப் பிரச்சினை சென்றது. யாழ்ப்பாணத்தில் இவ்வாறு நடந்துகொள்ளும்போது எப்படி நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும். இவர்களின் நல்லிணக்கம் இதுவா என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பினார்.
இராஜகிரியவிலுள்ள அமைப்பின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யாழ். நாக விகாரையின் முன்னாள் விகாராதிபதி மேகாஜதுரே ஜானாத்தன தேரர் உயிரிழந்தமையை அடுத்து அவரது பூதவுடலை தகனம் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் முடியாமல் உள்ளது.
அப்படியாயின் இவர்களின் நல்லிணக்கம் இதுவா?.
இவ்வாறு செயற்பட்டு எப்படி நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலும் மனோ கணேசன் தலைமையிலும் நல்லிணக்கம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நடக்கும் போது இப்படி நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும்.
தற்போது சிறுபான்மை மக்களை தமது ஆதிக்கத்தை வளர்த்து வருகின்றனர். நாட்டின் முக்கியமான அமைச்சுக்கள் பல முஸ்லிம்களிடம் உள்ளது.
இவர்களின் செயற்றிறனை பார்த்து சிங்கள தலைவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் தற்போது சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் முன் வைக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சர்வ கட்சி மாநாட்டை நடத்தி அனைத்து கட்சிகளின் ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன பெற வேண்டும் என்றார்.