போர்க்கப்பல் விற்பனைக்காக தனி ஜெட் விமானத்தில்-ரஷ்ய ஆயுத நிறுவன தலைவர் இலங்கை விஜயம் !
இலங்கை கடற்படைக்கு ஜிபார்ட் 5.1 ரக ஆழ்கடல் ரோந்துக் கப்பலை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கான 135 மில்லியன் டொலர் உடன்படிக்கை குறித்து ஆராய ரஷ்ய அரசின் பாதுகாப்பு ஏற்றுமதி நிறுவனத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது.
இக் குழுவினர் ஏனைய ரஷ்ய பாதுகாப்பு கருவிகளை வழங்குவது குறி த்தும் பேச்சுக்களை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரஷ்ய நிறுவனம், போர் டாங்கிகள், சண்டை வாகனங்கள், போர் பயிற்சி விமான ங்கள், குண்டுவீச்சு விமானங்கள், விமானங்கள், உலங்கு வானூர்திகள், கப்பல்கள், படகுகள், நீர்மூழ்கிகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பனவற்றையும் வழங்க முன்வந்துள்ளது. இலங்கைக்கு போர்க்கப்பலை விலைப்ப டுத்தும் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக, ரஷ்ய ஆயுத நிறுவனத்தின் தலைவரான அலெக்சாண்டர் அலெக்சாண்ட்ரோவிச் மிக்கீவ் தலைமையிலான குழு தனிப்பட்ட ஜெட் விமானத்தில் கொழும்பு வரவுள்ளது.
ரஷ்ய அதிபரின் நெருங்கிய நண்பரான அலெக்சான்டர் அலெக்சான்ட்ரோவிச் மிக்கீவுடன் உயர்மட்ட அதிகாரிகளும், தனிப்பட்ட சிறப்பு பாதுகாப்புக் குழுவினரும் கொழும்பு வரவுள்ளனர்.
அலெக்சாண்டர் அலெக்சாண்ட்ரோவிச் மிக்கீவ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பலரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.