ஐ.தே.க.வின் விசேட மாநாடு ஜனவரி 6ம் திகதி - கொழும்பில் நடாத்த திட்டம் !
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடவு ள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் கலந்துரையாட லாக அனைத்து பங்காளி கட்சிகளும் ஒன்றிணைந்து ஜனவரி 6 ஆம் திகதி விசேட மாநாடொன்றை கொழும்பில் நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் நேற்றைய தினம் தீர்மா னம் நிறைவெய்தியுள்ளது. பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசி யக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் செயற்குழு கலந்துரையாடல் ஆரம்பமாகியது.
இக் கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொட ர்பில் மேலும் தெரிவிக்கையில் ,உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிலையில் உள்ளூராட்சி வேட்பாளர்களை அறிவுறுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. தற்போது 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன.
இதன்படி அடுத்த வாரம் ஏனைய உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடவே திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டி யிடவுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்ட மாக அனைத்து பங்காளி கட்சிகளும் ஒன்றிணைந்து ஜனவரி 6 ஆம் திகதி விசேட மாநாடொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.