Breaking News

"இறுதிக்கணங்கள் வரை அமைதியான முறையில் தீர்வு கண்டுள்ளோம்."

"வன்னி மாவட்டத்தில் வவுனியா நகர சபை மற்றும் துணுக்காய் பிரதேச சபை இரண்டிலும் தமிழீழ விடுதலை கட்சியின் சார்பில் நேரடி வட்டாரத் தேர்தலில் நாம் எந்தவொரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை.

இரண்டு சபைகளிலும் விகிதாசாரப் பட்டியலில் கிடைக்கின்ற முதல் உறு ப்பினர் எமது கட்சிக்கு வழங்க இண க்கம் காணப்பட்டுள்ளது." என அக்க ட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். வினோ நோகராதலிங்கம் தெரிவித்து ள்ளார்.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சில சபைகளில் ரெலோ கட்சி போட்டியிடாமை குறித்து அவரிடம் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்து ள்ளார். மேலும் தெரிவிக்கையில், "குறிப்பிட்ட சபைகளில் எம்மால் கோரப்ப ட்ட வட்டாரங்கள் சக பங்காளிக் கட்சிகள் விட்டுக் கொடுக்க முன்வராததால் குறிப்பிட்ட வட்டாரங்களை விட்டுக்கொடுத்து விகிதாசாரப்பட்டியலில் எமது வேட்பாளர்களை நியமித்திருக்கின்றோம். 

இதில் உடன்பாடு காணப்பட்டதனால் தான் நாம் நேரடி வட்டார தேர்தலில் எமது வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஒட்டு மொத்த வேட்பாளர்கள் தேர்வில் பங்காளிக்கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் நிறையவே இருக்கி ன்றன. 

வேட்புமனுக்கள் வழங்கப்பட இருந்த இறுதிக்கணங்கள் வரை பிரச்சனைகள் இருந்த போதும் கூட்டமைப்பின் ஒற்றுமையை நினைவில் கொண்டு அமை தியான முறையில் தீர்வு கண்டுள்ளோம். எனினும் இந்த அமைதியானது ஏற்று கொள்ளப்பட்டதென அர்த்தம் கொள்ளக்கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.