Breaking News

பெப்ரவரி 10 இல் தேர்தல் உறுதி - மஹிந்த தேசப்பிரிய !

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ர வரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமென சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

இது தொடர்பான வர்த்தமானி அறிவி த்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வெளியிடுவதாக மேலும் தெரிவித்துள்ளார். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கருத்து வழங்குகையில் இவ்வாறு மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.