Breaking News

இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு முரணாக ஐ.நாவில் தாக்கல் !

இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்துக்கு எழுநூற்றி ஐந்து சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு தொடுத்துள்ளனர். 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகளாவிய ரீதி யில் ஒருங்கிணைந்த 1705 சட்டத்தர ணிகள் தமது முறைப்பாட்டை கடந்த டிசெம்பர் 8ம் திகதி ஐ.நாவில் தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரத மர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கையில்......

இலங்கையின் அரசமைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் குடியியல், அர சியல் உரிமைகள் பற்றிய அனைத்துலக உடன்படிக்கையின் 18, 19, 1 ஆகிய உறுப்புகளில் உறுதியளிக்கப்பெற்ற பேச்சுரிமையையும் மனசாட்சிச் சுதந்தி ரத்தையும் சுயநிர்ணய உரிமையையும் மீறுவதாகுமென இம்முறையீடு தெரி விக்கின்றது. 

அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க், இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியர் கே. பி. சிவசுப்ரமணியம், மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர் இம்முறையீட்டைத் தாக்கல் செய்தனர். 

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்சு, சுவிட்சர்லாந்து, இந்தியா (தமிழ்நாடு, மகாராட்டிரம், கர்நாடகம், புது தில்லி) தென்சூடான் ஆகிய நாடுக ளைச் சேர்ந்த சட்டத்தரணிகள் மன்றத் தலைவர்கள், சட்டப் பேராசிரியர்கள், ஒய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட உலகளாவிய சட்டத்தரணிகள் இம்முறை யீட்டுக்குச் சட்டப் பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளனர். 

இச் சட்டப் பிரதிநிதித்துவம் இலங்கையில் புகழ் பெற்ற நிறைமன்ற விசார ணையின் போது, நினைவில் வாழும் பெருமக்கள் சா.ஜே,வி. செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம், எம். திருச்செல்வம் உள்ளிட்ட 67 சட்டத்தரணிகள் வழ ங்கிய சட்டப் பிரதிநிதித்துவத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. 

அந்த விசாரணையில்தான் இலங்கை அரசாங்கத்துக்குத் தமிழர்கள் மீது இறைமை கிடையாதென தமிழ்த் தலைவர்கள் கூறினார்கள். அனைத்துலக வழக்காற்றுச் சட்டமாக மதிக்கப்படும் ஐநா பொதுப் பேரவைத் தீர்மானம் எண் 2625 (1970) என்பதற்கிணங்க சுதந்திர அரசு என்ற வடிவில் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையைப் பயன்படுத்த இயலும் என்றாலும், இலங்கையின் அரச மைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் இதனைக் குற்றச் செயலாக்குவதாக உள்ளது. 

டான் சந்திரசோமா எதிர் மாவை எஸ். சேனாதிராஜா, செயலாளர், இலங்கைத் தமிழரசுக் கட்சி (c.eP. jdp [SC SPL] 03/2014) என்ற வழக்கில் 2017 ஏப்ரல் 8ஆம் நாள் வெளியிடப்பட்ட இலங்கை உச்ச நீதிமன்ற முடிவும் இந்த முறையீட்டில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. 

 சுதந்திர அரசு வேண்டுமென அமைதியான முறையில் எடுத்துரைப்பதும் கூட அரசமைப்புச் சட்ட ஆறாம் திருத்தத்தின் உறுப்பு 4 [157A (4)] , உறுப்பு [157A (5)] ஆகியவற்றின் வழிவகைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்பதை மேற் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காட்டுவதாக இம்முறையீடு எடுத்துரைக்கி றது. 

இலங்கை அரசமைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் சுதந்திர அரசு வேண்டுமென அமைதியான முறையில் எடுத்துரைப்பதையே குற்றச் செய லாக்குகிறது என்றும், இது குடியியல், அரசியல் உரிமைகள் பற்றிய அனை த்துலக உடன்படிக்கையில் உறுதியளிக்கப்பெறும் மனசாட்சிச் சுதந்திரத்தை யும் பேச்சுரிமையையும் மீறுவதாகும் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக அளவில் நன்கறியப்பட்ட பல வழக்குகளையும் எடுத்துக்காட்டி வருகிறது. 

மேலும், புதிய இடைக்கால அரசமைப்புச் சட்ட அறிக்கையில் இடம்பெறும் ‘பிரிக்கப்படாத, பிரிக்கவொண்ணாத ஒரே நாடு’, ‘ஐக்கியராஜ்யா’, ‘ஒருமித்த நாடு’ என்ற சொல்லாட்சியையும், அந்த அறிக்கையின் உறுப்பு 2.2.இல் காணப்ப டும் பிரிவினைக்கு எதிரான காப்புக் கூறுகளையும் சட்டத் தரணிகளின் முறையீடு எடுத்துக்காட்டுகிறது. 

இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள் புதிய அரசமைப்பை வரையவும் பொது வாக்கெடுப்பு கோரவும் செய்து வரும் ஏமாற்று முயற்சியைக் கருதிப் பார்க்கையில், ஐநாவுக்கான இம்முறையீடு காலத்தே செய்யப்படுவதாகும். இலங்கை அரசமைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் தமிழர்கள் தமது அரசியல் வேணவாக்களை விரும்பியவாறு வெளிப்படுத்துவதைத் தடை செய்கிறது. 

பொதுவாக்கெடுப்பு நடத்துவதானால், தங்குதடையற்ற திறந்த அரசியல் வெளி யில் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் அட ங்கிய தமிழ்த் தேசத்தினிடையே நடத்த வேண்டுமென அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.