Breaking News

வரவு-செலவுத் திட்டத்தை யதார்த்த பூர்வமாக எதிர்க்க எதிர்க்கட்சிகளால் முடியவில்லை: பிரதியமைச்சர்

அரசு முன்வைத்த 2018க்கான வரவு-செலவுத் திட்டத்தை எதிர்க்கட்சியால் யதார்த்த ரீதியாக எதிர்க்க முடியாமல் போய்விட்டது என, கொள்கை வரை வுத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

மேற்படி வரவு-செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின் இறுதி நாளான நேற்று பாராளுமன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “அரசு கள் முன்வைக்கும் வரவு-செலவுத் திட்டங்கள் எதிர்க்கட்சிகளின் கடுமை யான எதிர்ப்பைப் பெறுவது இயல்பா னது தான். 

ஆனால், இம்முறை அவ்வாறான யதார்த்தமான எதிர்ப்பை நாம் காண வில்லை. இது குறித்து நிதியமைச்சர், பிரதி நிதியமைச்சர் மற்றும் நிதியமை ச்சின் அதிகாரிகள் திருப்தி கொள்ள வேண்டும். “பியர் விவகாரம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. 

ஒரு சில கொள்கைகள் அடிப்படையில் வரிகள் விதிக்கப்படுகின்றனவே தவிர, மக்கள் மது அருந்த வேண்டுமா, வேண்டாமா என்பதை அது முடிவு செய்வ தில்லை. வெளிநாடுகளிலும் இந்த நடைமுறை இருக்கிறது.” இவ்வாறு பிரதி யமைச்சர் தெரிவித்தார்.