எத்தகைய சவால்களுக்கும் முகங்கொடுக்கத் தயார் என்றார் - ஜனாதிபதி
எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டாலும் தூய அரசியல் இய க்கத்திற்கான தனது அர்ப்பணிப்பை கைவிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறந்த அரசியல் கலாசாரத்தை அடு த்த தலைமுறைக்கு வழங்குவதற் கான பொறுப்பை நிறைவேற்ற வேண்டியது இன்று தேசத்தின் தேவையாக உள்ளது என்றும், தான் அந்த யுகப் பணியை பொறுப்பேற்று இருப்பதாகவும் நாட்டை நேசிக்கும் இலட்சக் கணக்கான மக்கள் இப்பணிக்காக ஒன்று சேர்வார்கள் என்றும் ஜனா திபதி குறிப்பிட்டார். நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பொன்றின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஊழல் மோசடியை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இன்று முழு நாடும் பேசுகின்ற பிணை முறி ஆணைக்குழு அறிக்கை கிடைக்கப்பெற்றதும் ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின் எயார் விமான சேவை தொடர்பில் கண்டறிவதற்காக ஆணை க்குழுவை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தூய அரசியல் இயக்கமாக பலப்படுத்த வேண்டி யதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தாது நாட்டை நேசிக்கும் அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்ப முடியாது என்றும் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தான் எதிர்பார்ப்பது கட்சியினால் பிரகாசிக்கும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது வேட்பாளர்களன்றி, அவ ர்களின் மூலம் கட்சி பிரகாசிக்க வேண்டுமென்பதேயாகுமென ஜனாதிபதி குறி ப்பிட்டார்.
அதிகார பலத்தினால், பணப் பலத்தினால் அல்லது பதவிப் பலத்தினால் இம்முறை உள்ளூராட்சி தேர்தலை வெற்றிபெற முடியாதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய தேர்தல் முறைமைக்கு ஏற்ப இது அறிவு பூர்வமாக வெற்றி கொள்ள வேண்டிய தேர்தலாகுமெனக் குறிப்பிட்டார்.
அபேட்சகர் ஒருவரின் நடத்தை, பண்பாடு மற்றும் மக்கள் அங்கீகாரமே அவரது வெற்றிக்கு காரணமாக அமையுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டை நேசி க்கும் உண்மையான மக்கள் பிரதி நிதிகள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.