தமிழ்க் கட்சிகள் இணைந்து பிரதமர் ரணிலுடன் இரண்டாவது சுற்றுப் பேச்சு!
அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் சில கட்சிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மற்றுமொரு பேச்சு வார்த்தையை நடத்தவுள்ளன.
இதற்கமைய தமிழ் முற்போக்கு கூட்டணி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லி ம் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இச் சந்திப்பில் கலந்து கொள்கின்றன.
இச்சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வ ரும் பெப்ரவரி மாத முதல்வாரத்தில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தேர்தலில் கூட்டணியிட்டு போட்டியிடுவது மற்றும் தனி த்தனியாக போட்டியிடுவது பற்றிய பலதரப்பு பேச்சுக்கள் தென்னிலங்கையில் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் இவ்விவகாரம் பற்றி தமிழ்க் கட்சிகள் பிரதமருடன் ஏற்க னவே இருதடவைகள் சந்திப்பை நடத்தியிருந்த நிலையில் இன்றைய தின மும் பேச்சு இடம்பெறவுள்ளது.