Breaking News

நிறைவேற்றதிகார செயற்பாடு 2020க்குப் பின்பும் நீடிக்குமாம் - துமிந்த ஆருடம் (காணொளி)

கோடிக்கணக்கிலான பணத்தையும், தலைகளின் எண்ணிக்கைகளையும் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி ஈட்டினாலும் வழங்கிய வாக்குறு திகளை நிறைவேற்றாதிருப்பதால் மக்களுக்கு கிடைத்த வெற்றியென தெரி விக்க முடியாதென முன்னிலை சோஷஸிசக் கட்சி தெரிவித்துள்ளது. 

2015ஆம் ஆண்டு ஜனாதிபித தேர்தலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக வாக்குறுதியளி த்தவர்கள், அடுத்த ஜனாதிபதி தேர்தலு க்குப் பின்னரும் இரத்து செய்ய க்கூடாது என்பதை கூறமாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது என்ற கேள்வி தொடுக்கப்பட்டுள்ளது. முன்னிலை சோஷஸிசக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் அரசியற் பிரிவு உறுப்பினர் துமிந்த நாக முவ கருத்துரைத்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் ஒருபொழுது கூட அல்லது ஒரு மணித்தியாலம் கூட பதவியில் இருக்க ப்போவதில்லை என்றே 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மேடையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. 

100 நாட்களில் நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்படும் என்று 100 நாள் அரசில் கூறப்பட்டிருந்தாலும், இம் முறைமையை இல்லா தொழிக்கா விட்டால் நாடு பாதாளத்தில் விழுந்துவிடும் என்பதை ராவய சிங்கள பத்தி ரிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் இன்றும் இம் முறைமை முன்கொண்டு செல்லப்படுவதோடு, அது பற்றி பேசியவர்கள் இன்று மௌனமாகி விட்டனர். இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் நிறைவேற்று அதிகார முறையை இரத்துச் செய்யக் கூடாதென்ற தர்க்கத்திற்கு வரமாட்டார்கள் என நினைக்கிறீர்களா? 

இல்லை. மிகப்பெரிய ஆபத்துள்ளதனால் இம் முறைமையை நீக்கக்கூடாது என்பதை ரணில், மைத்திரி, கோட்டா மேலும் பலரும் கூறுவது நிச்சயம். நிமி டத்திற்கு நிமிடம் தலைகளின் எண்ணிக்கையை மாற்றியமைத்து தேர்தலில் வெற்றிபெறுவதால் அவ் வெற்றியானது மக்களின் ஆணை எனத் தெரிவிக்க முடியாதென தெரிவித்துள்ளார்.