அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு வேண்டுகோள் - மகிந்த தேசப்பிரிய
நீதியான தேர்தலுக்காக அர்ப்பணிப்புடன் அனைத்து தெரிவத்தாட்சி அலுவலர்களும் செயற்பட்டு ஒத்துழைப்புக்களை நல்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்து ள்ளார்.
இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நாடாளவிய ரீதியில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும், தேர்தல்கள் ஆணை க்குழுவின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் நாடாளவிய ரீதியிலு ள்ள அனைத்து மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களும் கலந்துகொண்டிருந்தனர். குறித்த சந்திப்பின்போது, தெரிவத்தாட்சி அலுவலர்கள் அனைவரும் தமது மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள ஆயத்தச் செயற்பாடுகளை தெளிவாகத் தெரிவி த்தார்கள்.
அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், இம்முறை தேர்தலின்போது தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆளணியினரின் எண்ணிக்கை அதிகமாக அவசியமாகின்றது. ஆகவே அதற்குரிய தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் வாக்களிப்பு நிலையங்களில் பெரும்பாலானவை வாக்கு எண்ணும் நிலையங்களாக மாற்றப்படவுள்ளன.
ஆகவே உரிய பாதுகாப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அதற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு உரிய தயார்ப்படுத்தல்களை முன்னெடுக்க வேண்டும் உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டார்.
இதனையடுத்து ஒவ்வொரு மாட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களும், தமது மாவட்டங்களில் காணப்படுகின்ற பற்றாக்குறைகள் தொடர்பாக குறிப்பிட்டுக்கூறினார்கள். குறிப்பாக, வாகனங்கள், ஆளணியினர், போன்றவை தொடர்பில் பற்றாக்குறைகள் காணப்படுவதாக பல மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுலர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அச்சமயத்தில் ஆணைக்குழுவின் தலைவர், அதுதொடர்பிலான மாற்று யோசனைகள் தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்டதோடு, குறிப்பாக வாக்கு எண்ணும் பணிகள் வாக்கு எண்ணும் நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளமையால் அது குறித்து கூடியளவு கவனம் செலுத்துமாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலை செவ்வனே நடத்துவதற்கான அனைத்து ஆயத்தப்பணி களையும் விரைந்து முன்னெடுக்குமாறு பணித்ததோடு சுயாதீனமானதும், நீதி யானதுமான தேர்தலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு வேண்டு கோள் விடுத்துள்ளார்.