டில்லு குழுவின் மேன்முறையீட்டை நிராகரித்த நீதிபதி - இளஞ்செழியன்
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த டில்லு எனப்படும் குழுவினருக்கு நீதிவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட தண்டனை சரியானதெனவும் அவர்களது மேன்முறையீட்டு மனுவை நிராகரிப்பதாகவும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாழ். மடம் வீதியில் குடும்பத் தலை வர் ஒருவரை வாளால் வெட்டிய குற்றச்சாட்டில் ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு விசாரணையை தொடர்ந்து குற்றம் நிரூபிக்கப்பட்ட 8 பேருக்கு யாழ்ப்பாணம் நீதி வான் நீதிமன்றம் தண்டனை தீர்ப்பளி த்திருந்தது.
இதன்படி சத்தியநாதன் அன்ரனிஸ் அல்லது டில்லு, அரவிந்தன் அலெக்ஸ் மற்றும் சிவேந்திரன் கலிஸ்ரன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் விஜயரத்தினம் ஜனு சன், ஜெகதீஸ்வரன் டிரெக்ஸ்காந்தன், அருந்தவராஜ் செந்தூரன், பெனடிக்ட் வெஸ்லி ஏபிரகாம், தேவராசா ஹரிசன் ஆகியோருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், பாதிக்கப்பட்டவருக்கு 8 குற்றவாளிகளும் 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அதனைச் செலுத்தத் தவறின் ஓர் ஆண்டுகால சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் தீர்ப்பளித்திருந்தார்.
இவ் நீதிவான் நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து குற்றவாளிகள் 8 பேர் சார்பிலும் அவர்களது சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தனர். மனு மீதான விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் ரட்ணசிங்கம் ஜனுசன் மற்றும் பெனடிக்ற் வெஸ்லி ஏபிரகாம் ஆகியோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிணை விண்ண ப்பம் செய்தார்.
அதனடிப்படையில் மேன்முறையீட்டுமனு விசாரணை நிறைவடையும்வரையில் அவர்கள் இருவருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிணை வழ ங்கியது.
இந்த நிலையில் 8 பேரின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் வழங்கியிருந்தது.
"மேன்முறையீட்டாளர்களால் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலுள்ள சட்டம், நிகழ்வுத் தவறுகள் எண்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமானது என குறிப்பிட்டார்.
இதன்படி குற்றவாளிகளிடம் தண்டம் அறவீடு செய்வது அவசியமானது, எனினும் நீதிவான் மன்றால் அது கருத்திற்கொள்ளப்படவில்லை.
எனவே, 8 சந்தேகநபர்களும் தலா ஆயிரத்து 500 ரூபா தண்டப் பணத்தை நீதி வான் மன்றில் செலுத்தவேண்டும் எனவும் அதனை செலுத்தத் தவறின் மேலும் ஒரு மாதம் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் மேன்முறையீட்டு மனு மீது தீர்ப்பளிக்கப்பட்டதால் மேல் நீதி மன்றால் பிணை வழங்கப்பட்ட இருவரினதும் தண்டனைக்காலம் இன்று ஆர ம்பமாவதை நீதிவான் நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.