உலகக்குழு தலைவரின் மகனை வேட்பாளர் பட்டியலில் இருந்து விலக்கினார் - பிரதமர்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாநகர சபைக்கான வேட்பாளர் பட்டியலில் இணைக்க தயாராக இருந்த ஒருவரின் பெயரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலையிட்டு நீக்கியுள்ளார்.
பிரபல பாதாள உலகக்குழுவின் தலைவரின் மகனின் பெயரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பாதாள உலகக்குழுத் தலைவர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளதுடன், அவரது மகனை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இணைக்க அக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவர்கள் கடும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, இது குறித்து தகவல் அறிந்த பிரதமர் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வேட்பாளர் பட் டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.