Breaking News

மலேஷிய பிரதமரை இன்று ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரசாக்விற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இச்சந்திப்பின் பின்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்காவையும் சந்தித்து கல ந்துரையாற்றவுள்ளதுடன் விஞ்ஞான தொழில்நுட்பம், புதிய உற்பத்திக்கான உடன்படிக்கை ஆகியன தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கை கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இவ் உடன்படிக்கையின் மூலம் பொருளாதார அபிவிருத்தி மற்றும் இராஜ தந்திர பயிற்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் மலேசிய பிரதமர் ஸ்ரீலங்கா விற்கு விஜயம் செய்துள்ளதாக, வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மலேஷியா மற்றும் இலங்கைக்கு இடையிலான, இராஜதந்திர உறவுகள் ஆர ம்பிக்கப்பட்டு, 60 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு விசேட முத்திரை ஒன்றும், கடித உறையொன்றும் வெளியிடப்படவுள்ளது.