Breaking News

காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடவில்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அம்பாறை காரைதீவு பிரதேச சபை யில் தமிழர் பிரதி நிதித்துவத்தை பா துகாக்க வேண்டிய தேவையினைக் கருத்தில் கொண்டு அந்தப் பிரதேச சபைத்தேர்தலில் போட்டியிடவி ல்லையென அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் குறிப்பிட்டு ள்ளார். நேற்றைய தினம் வெளியிட ப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்  விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு, திருக்கோவில், நாவிதன்வெளி பிரதேச சபைகள் உட்பட கல்முனை மாநகர சபைக்குமான தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி போட்டியிட வுள்ளது.

காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்ப ணத்தை ஏற்கனவே செலுத்தியபோதும் தமிழர் பிரதி நிதித்துவத்தை பாதுகா ப்பதற்காகவும், தமிழர் மகாசபை சுயேட்சையாக போட்டியிடுவதை கருத்திற் கொண்டும் அந்த பிரதேச சபைக்கு போட்டியிடுவதில்லையென எமது ஆத ரவை தமிழர் மகாசபைக்கு வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளோம்.

தமிழ் மக்களின் பிரதி நிதித்துவத்தை காப்பற்ற வேண்டியதன் காரணமாக தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் விட்டுக் கொடுத்து எமது மக்க ளின் பிரதி நிதித்துவத்தை காப்பாற்றுவது தான் எமது கட்சியின் செயற்பாடா கும். அந்த வகையில் காரைதீவு பிரதேசசபையின் பிரதி நிதித்துவத்தை பாது காக்க வேண்டியது எமது தமிழ் மக்களது பொறுப்பாகும். 

எனவே அந்த பிரதேசத்தில் எமது கட்சி ஆதரவாளர்களை தமிழர் மகாசபைக்கு ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.