சுகந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட சந்தர்ப்பமில்லையாம் – மஹிந்த
உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு எதிரணி இணைந்து போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு.
அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவின் மகனின் திருமண நிக ழ்வில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தமை தொட ர்பில் கருத்து வழங்குகையில் தெரி வித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
‘நாங்கள் அரசியல் பேசவில்லை. தாம் மற்றொரு திருமணத்தில் பங்கேற்க வேண்டியிருப்பதாக மைத்திரிபால சிறிசேன என்னிடம் தெரிவித்தார். நானும் கூட இன்னொரு திருமணத்தில் பங்கேற்க வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பொதுமக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கூட்டு எதிரணி தனித்துப் போட்டியிடும் முடிவு இறுதியானது என்றும், வேட்புமனுக்களை இறுதி செய்வதில் தாம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.