மக்களின் பெயரால் இராணுவம் அறிக்கை வரைந்ததால் கேப்பாபுலவு மக்கள் விசனம்!
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவில் இராணுவத்தின் வசமுள்ள எஞ்சிய காணிகளை விடுவிக்க வேண்டுமெனக் கோரி மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலரிடம் கையளிக்கக் சென்ற மனு இராணுவத்தால் மறுக்கப்ப ட்டுள்ளது.
அதற்குப் பதிலாக அபகரிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்றுக் காணிகளை அல்லது அவற்றுக்கான நட்டஈடு கோரும் மனுவே மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கேப்பாபிலவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நட்டஈடு கோரி கையளிக்கப்பட்ட மனுவுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென மேலும் தெரிவித்துள்ள நிலையில் இராணுவம் கையகப்படுத்தியிருந்த 133.34 ஏக்கர் காணி நேற்று இரா ணுவத்தால் விடுவிக்கப்பட்டது.
அவற்றில் 111.5 ஏக்கார் காணிகள் கேப்பாபிலவு மக்களுக்குச் சொந்தமானவை. இன்னும் 285.5 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் வசமே உள்ளன.
அவற்றை விடுவிக்குமாறு வலியுறுத்தி நேற்று மக்கள் மனு ஒன்றைக் கையளிக்க முய ற்சித்தனர். காணி கையளிப்பு நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கு மனுவுடன் சென்ற மக்களை இராணுவத்தால் தடுக்கப்பட்டு மனுக்கொண்டு சென்றவர் அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் மனுவுக்குப் பதிலாக இராணுவம் தயாரித்த மனுவை மீள்குடியே ற்ற அமைச்சின் மேலதிக செயலரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் கேப்பாப்பிலவில் விடுவிக்கப்படாதுள்ள காணிகளுக்கு மாற்றுக் காணிகள் தாருங்கள். அல்லது நட்டஈடு தாருங்கள் எனக் கோரப்பட்டுள்ள அந்த மனுவில் சுமார் 15 பேரின் கையெழுத்துக்கள் உள்ளன என மக்களால் தெரிவி க்கப்பட்டுள்ளது.
“இச் சம்பவம் உண்மை. அது மறைக்கப்படக் கூடாது. இராணுவம் கையளித்துள்ள மனுவில் காணப்படும் கையொப்பங்களுக்கு உரிந்துடையவர்களிடம் விசாரித்தேன். காணிகளுக்கு நட்டஈடு தருமாறு ஒருபோதும் கோரவில்லை என அவர்கள் கூறினார்கள்.
இது தொடர்பில் அவர்களிடம் கடிதமும் பெற்றுள்ளேன். இது திட்டமிட்டே செய்யப்பட்டுள்ளது.”- என்று கூறினார் கேப்பாபிலவு காணி மீட்புப் போராட்டத்தை முன்னகர்த்திச் செல்லும் ஆறுமுகம் வேலாயுதபிள்ளை.