சாரதி இன்றி பயணித்த பஸ் - வவுனியாவில் அதிர்ச்சி !
வவுனியா, ரயில் நிலைய வீதியில் சாரதி இன்றி மினிபஸ் ஒன்று ஓடியதால் மக்கள் பதற்றத்துடன் வீதியில் இருந்து நாலாபுறமும் தப்பி ஓடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
நேற்று மாலை 6 மணியளவில் நடை பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,வவுனியா, ரயில் நிலைய வீதி சென்ற மினி பஸ்சை அரச வங்கி ஒன்றின் முன்னால் நிறு த்திய அதன் சாரதி வங்கிக்குள் சென்றுள்ளார்.
மேலும், குறித்த பஸ் சாரதி இன்றி அவ்விடத்தில் இருந்து ரயில் வீதி நோக்கி நகர்ந்து சென்று எதிரே வந்து கார் மற்றும் மோட்டர் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளாகி தொடர்ந்தும் சென்றுள்ளது.
சாரதி இன்றி குறித்த மினிபஸ் வீதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பய ணிப்பதை அவதானித்த அவ்வீதியால் பயணித்த பயணிகள் தமது வாகனங்க ளுடன் நாலா புறமும் சிதறி ஓடினர்.
சுமார் 50 மீற்றர் தூரம் வரை பயணித்த குறித்த மினிபஸ்சை பலர் ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவி ல்லை.
இது குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து ள்ளனர்.