பிரபாகரனிடம் மண்டியிடாத நாம் அரசியல் வாதிகளிடமா மண்டியிடப்போவது - மகிந்த!
பிரபாகரனிடம் மண்டியிடாத நாம் இன்றைய அரசியல்வாதிகளிடமா மண்டியிடப்போகின்றோம், எந்த சவாலையும் வெற்றிகொள்வோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசனம்.
உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் நாங்களே, சின்னத்தை விட வும் கொள்கை ரீதியில் உள்ளோம் எனவும் மகிந்த ஆதங்கம். ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் முதலாவது தேர்தல் கூட்டம் நேற்று பதுளை யில் ஆரம்பமாகியுள்ளது. இதில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறுகை யில்.
நல்லாட்சி வந்தால் நாடு அபிவிருத்தி அடையும் எனவும் மக்களிடம் பணம் இருக்கும் எனவும் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டின் பொருளாதரத்தில் வீழ்ச்சி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை நாம் வீழ்த்தியதாகவும், இந்த நாட்டினை கடனில் ஆழ்த்தியது எமது அரசாங்கம் எனவும் கூறுகின்றனர். நாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தான் வீழ்ச்சிக்கு காரணம் எனக் கூறுகின்றனர்.
ஆனால் நாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுக்க சரியான வேலைத்திட்டங்களை வகுத்திருந்தோம். மேலும் ஸ்ரீலங்கா சுத ந்திர கட்சியில் இருந்து எம்மை வெளியேற்றவும் நாம் ஸ்ரீலங்கா காரர்கள் இல்லை எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரர்கள் நாங்கள் தான். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பது சின்னம் அல்ல, கொள்கையே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகும். அது எம்மிடம் மட்டுமே உள்ளது.
தேசிய அரசாங்கத்தில் சலுகைகளுக்காக தஞ்சம் புகிந்துள்ள ஒரு இலர் தம்மை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் எனவும் எமது மக்களை பாதுகாக்கவே தாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் கூருகினர்னர். அவ்வாறு என்றால் நாம் எதற்காக உள்ளோம், எதற்காக இந்த போரா ட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த நாட்டின் மீண்டும் சரியான தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காகவே மீண்டும் நாம் போராட ஆரம்பித்துள்ளோம்.
இந்த நாட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டினை பாதுகாத்துள்ளோம்.
பிரபாகரனின் அச்சுறுத்தல், அவர்களுக்கு இருந்த சர்வதேச பலம் எதையும் கண்டு அஞ்சாது, அவர்களிடம் மண்டியிடாத நாம் இன்றுள்ள அரசியல்வாதி களில் வெட்டி சவால்களுக்காக அடிபணியப்போகின்றோம்.
இந்த அரசாங்கம் எம்மீது சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் எதையும் கண்டு நாம் அஞ்சப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.