2020 ஆம் ஆண்டு சு.க.வின் தனி ஆட்சி - மைத்திரிபால சிறிசேன
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இனி ஒருபோதும் குடும்ப அரசியல் உருவாவதற்கு இடமில்லை. எனது தலைமையின் பின் எனது குடும்பத்தில் எவரும் கட்சியை ஆக்கிரமிக்கப்போவதில்லை.
2020 ஆம் ஆண்டு அமையும் எமது தனி அரசாங்கம் மிகவும் தூய்மையான அரசாங்கமாக மாற்றம் காணும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு அமையும் எமது தனி அரசாங்கம் மிகவும் தூய்மையான அரசாங்கமாக மாற்றம் காணும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
என்னை விமர்சிக்க நினைப்பவர்களுக்கு இப்போது எனது கொள்கையும், நான் சர்வதேச தலைமைகளுடன் கொண்டுள்ள உறவும் என்னவென்று விள ங்கியிருக்கும் எனத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கும் 31 பங்காளிக் கட்சிகளினதும் வேட்பாளர்கள் இணைத்த வி.சேட மாநாடு நேற்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது, இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
மேலும் உரையாற்றுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் பங்காளிக் கட்சிகளை இணைத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் களம் இன்று மிகவும் பரபரப்பான நிலையினை அடைந்துள்ளது. இதிலிருந்து பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் தேர்தலின் வெற்றி என்னவென்பது இப்போதே எமக்கு தெளிவாகத் தெரிகின்றது.
இத் தேர்தலில் நீங்கள் அனைவரும் வெறுமனே பிரதேச சபையினை வெற்றிகொள்ளப்போவதில்லை, அதையும் தாண்டி இந்த நாட்டினையே வெற்றிகொள்ளப்போகின்றீர்கள். இதில் உருவாகும் ஒவ்வொரு நேர்மையான உறுப்பினரும் அடுத்து இந்த நாட்டின் அமைச்சரவையை, பாராளுமன்றத்தை உருவாக்கும் நபர்களாக மாற்றம் பெறுவதுடன் இந்த நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக உருவாகும் நிலைமை உண்டு.
ஆகவே இப்போதைய பயணத்தை சாதாரண பயணமாக கருத வேண்டாம். எனவே ஊருக்கு சேவை செய்யும் ஒவ்வொரு நபர்களும் இந்த நாட்டு மக்களின் ஆதரவை பெற்று பலமான அரசியல் பயணத்தினை ஆரம்பிக்கப்போகின்றீர்கள்.
இந்த நாட்டினை எதிர்காலத்தை பொறுப்பேற்கும், இந்த நாட்டினை கட்டியெழுப்பும் மனிதாபிமான நேயம் கொண்ட தலைவர்களாக நீங்கள் மாற்றம் பெற வேண்டுமென நான் ஆசீர்வதிக்கின்றேன்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் எனது தலைமையில் என்ன மாற்றங்கள் நடந்துள்ளன, நான் என்ன செய்துள்ளேன் என சிலர் கேள்வி தொடுக்கின்றனர்.
நாட்டில் அண்மையில் சில பிரச்சினைகள் எழுந்தன. தேயிலை இறக்குமதிக்கு கட்டுப்பாட்டை ரஷ்ய அரசாங்கம் விதித்தது. இதன் பின்னர் எமக்கு பாரிய நெருக்கடி ஏற்படும் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன .
எமது வெளியுறவு கொள்கை மோசமானது எனத் தெரிவித்தனர்.
எனினும் ரஷ்ய ஜனாதிபதிக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அத்துடன் ரஷ்ய அரசாங்கம் உடனடியாக தடையை நீக்கியது. அதேபோல் உரத் தட்டுப்பாட்டு சிக்கல் ஒன்று ஏற்பட்டபோதும் பாகிஸ்தான் பிரதமருக்கு நான் தொலைபேசியில் கதைத்தேன், உடனடியாக 40 ஆயிரம் மெட்ரிக் தொன் உரம் அனுப்ப அவர் தீர்மானித்தார்.
அண்மையில் நான் கட்டார் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் இலங்கையில் ஒரு நகரை அபிவிருத்தி செய்ய கட்டார் அரசாங்கம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு பல சம்பவங்களை என்னால் கூறிக்கொண்டு செல்ல முடியும்.
ஆனால் இதுதான் நான் எனது ஆட்சியில் செய்துள்ள செயற்பாடுகள். சர்வதேச தரப்பை வெற்றிகொண்ட விதமும் இதுவே.
இந்த நாட்டில் ஊழல் இல்லாத, தூய்மையான அரசியலை உருவாக்க வேண்டுமென நான் கூற காரணம் என்ன? கடந்த காலங்களில் மிகவும் மோசனான ஊழல் அரசியல் தலைதூக்கியமையே இதற்குக் காரணமாகும்.
ஆகவே எனது அரசாங்கம் எனது ஆட்சியில் ஊழல் இல்லாத ஒரு அரசியலை உருவாக்கவே உங்களின் உதவியை நான் எதிர்பார்க்கின்றேன்.
எனது அரசியல் பயணத்தில் உங்களின் ஒத்துழைப்பு அவசியம். உங்களின் துணை, அர்ப்பணி ப்பு என்பன அவசியமாகும். குடும்ப அரசியல் இல்லாத களவு, ஊழல், குற்ற ங்கள் இல்லாத தூய்மையான அரசியலை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதன் மூலமாக மட்டுமே நாட்டை வெற்றிகொள்ள முடியும்.
எனது தலைமையின் பின்னர் எனது குடும்ப அரசியல் இக் கட்சியில் இருக்காது. இக் கட்சியை குடும்பம் ஆக்கிரமிக்கும் வகையிலான எந்த தலையீடு களும் நடைபெறாது.
2020ஆம் ஆண்டு அமையும் அரசாங்கத்தில் நாங்கள் தூய்மையான, மக்களு க்கு பொறுப்புக் கூறக்கூடிய அரசியல் சூழலை உருவாக்குவோம். அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக நேர்மையான பயணம் ஒன்றை முன்னெடுக்க, தூய்மையான அரசியலை முன்னெடுக்க அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.