மார்ச் 21 இல் ஐ.நா மனித உரிமை பேரவையின் 37 வது இலங்கையின் விவாதம் !
ஐ.நா மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமாகவுள்ளது.
அதேபோன்று பூகோள காலக்கிர மீளாய்வு தொடர்பான இலங்கையின் விவா தம் மார்ச் மாதம் 16ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை யில் இடம்பெறவுள்ளது.
இலங்கை தொடர்பான பிரதான விவா தம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஐக்கியநாடுகள் மனித உரி மை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பான தனது அறி க்கையை முன்வைப்பார். அதன்பின்னர் இலங்கை தனது தரப்பு நியாயம் சம்பந்தமான அறிக்கையை முன்வைக்கும்.
தொடர்ந்து உறுப்பு நாடுகள் இலங்கை நிலைமை தொடர்பில் இந்த விவாதத்தில் உரையாற்றவுள்ளன.
அதாவது 2015ஆம் ஆண்டு ஐ.நா . மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2017 ஆம் ஆண்டு மேலும் இரண்டு வருட கால நீடிப்புக்குள்ளான இல ங்கை குறித்து பிரேரணை எவ்வாறு அமுல்படுத்தப்படுகிறது என்பது தொடர்பான மீளாய்வு அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹசைனால் முன்வைக்கப்படவுள்ளது.
இதன்போது அவர் இலங்கை மீது தனது விமர்சனம் கலந்த அதிருப்தியை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது பிரேரணை நிறைவேற்றப்பட்டு மூன்று வருடங்கள் கடந்து விட்ட போதிலும் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயத்தில் இதுவரை சரியான முன்னேற்றம் காணப்படவில்லை என்ற அதிருப்தியை தனது அறிக்கை ஊடாக செயிட் அல் ஹூசைன் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இவ்வாறே பொறுப்புக்கூறல் பொறிமுறை தாமதமடைந்தால் அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை சார்பில் இவ் விவாதத்தில் உரையாற்றவுள்ள வெளிவிவகார அமை ச்சர் விபரமான ஒரு அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்யவுள்ளதுடன் 2015 ஆம் ஆண்டு ஐ.நா. பிரேரணை எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறித்த விளக்கங்களை வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமன்றி இலங்கை பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பது என்பதில் எவ்வாறான சவால்களை எதிர்கொள்கின்றது என்பது குறித்து வெளிவிவகார அமைச்சர் விளக்கமளிக்கவுள்ளார்.
அத்துடன் காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனூடாகவும் காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென பயங்கவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக புதிய சட்டமூலம் கொண்டு வரப்படுமென இலங்கையில் சார்பில் ஜெனிவாவில் பிரசங்கப்படுத்தப்பட வுள்ளது.
இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் பிரதி நிதிகளும் செயிட் அல் ஹூசை னும் தமது அறிக்கைகளை வெளியிட்ட பின்பு உறுப்பு நாடுகள் விவாதத்தில் விவாதிக்கவுள்ளனர்.
இதன்போது இலங்கை அரசாங்கம் விரைந்து பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டுமென எச்சரிக்கப்படவுள்ளது.
அதேபோன்று சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் மனித உரிமை அமை ப்புக்களும் இலங்கை தொடர்பில் பல்வேறு அறிக்கைகளை 37ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவுள்ளன. இந்த அறிக்கைகளில் இலங்கை பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலை நாட்டவேண்டுமென சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தவுள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் இலங்கை குறித்த பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மற்றும் விசாரணையாளர்களின் பங்களிப்புகளுடன் பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், நட்ட ஈடு வழங்குதல், மற்றும் மீள் நிகழாமை ஆகிய விடயங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்த வகையிலேயே அரசாங்கம் எவ்வாறு இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்பது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தாக்கல் செய்யவுள்ளார்.
இது இவ்வாறிருக்க மார்ச் மாதம் 16 ஆம்திகதி இலங்கை தொடர்பான பூகோள காலக்கிர மீளாய்வு விவாதமும் நடைபெறவுள்ளது. இதில் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை ஐ.நா. மனித உரிமை பேரவையில் வாக்குறுதிகள் தொட ர்பாக விவாதிக்கப்படவுள்ளது.
பெப்ரவரி 26ஆம்திகதி முதல் மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தலைமையில் உயர் மட்ட தூதுக்குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சின் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உயர் அதிகாரிகளும் இந்த தூதுக்குழுவில் அங்கம் வகிப்பர்.