Breaking News

பிரபாகரன் கல்வி கற்றதாக தெரிவிக்கப்படும் பாடசாலையை மூடுமாறு கோரிக்கை !

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கல்வி கற்றதாக கூறப்படும் அம்பாறை தமிழ் மகா வித்தியாலயத்தை மூடுமாறு தெரிவிக்க ப்பட்டுள்ளது.  

அம்பாறை நகருக்கு அண்மையில் விசாலமான காணியில் 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்பாறை தமிழ் மகா வித்தியாலயமானது தற்போது பயில்வதற்கு தமிழ் மாண வர்கள் இல்லாத காரணத்தினால் இப் பாடசாலையினை மூடிவிடுவத ற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடசாலையில் ஒரு ஆசிரியர் மற்றும் அதிபருடன் கற்றல் செயற்பாடுகள் இன்றி இயங்கி வருவதாகவும் இப்பாடசாலையின் கட்டடங்களில் இராணுவ இளைஞர் படையின் அலுவல கம் மற்றும் டி.ஈ.ஓ ஆகிய அலுவலகங்கள் இயங்கி வருவதாகவும் தெரிவி க்கப்படுகின்றது.

இந்நிலையில் அம்பாறை வலயக்கல்விப் பணிப்பாளர் விமலசேன மத்தம ஆராச்சினால் இப்பாடசாலையின் நிலைமைகள் தொடர்பாக கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் திஸாநாயக்காவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்பாடசாலையை மூடிவிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பாடசாலையில் கல்லோயா பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபையில் பணி யாற்றிய தமிழ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் கல்வி கற்று வந்ததுடன், அம்பாறையில் விடுதலைப் தலைவர் பிரபாகரனின் தந்தையார் அரச உத்தி யோகத்தராக கடமையாற்றிய வேளை விடுதலை புலிகளின் தலைவர் வேலு ப்பிள்ளை பிரபாகரன் ஆரம்ப கல்வியைப் பயின்றமைக்கான ஆவணங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் 1980 ஆண்டுக் காலப்பகுதயில் இங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக அங்கிருந்து வெளியேறியது டன் தமிழ் மாணவர்களும் கல்வி கற்கச் செல்லாத நிலையில் இப்பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இன்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.