வடமராச்சி கிழக்கில் சுனாமி நினைவாலயத்தில் உறவுகளிற்கு அஞ்சலி !
சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) தமிழர் தாயகம் எங்கும் உறவுகளால் அனுட்டிக்கப்பட்டு ள்ளது.
இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று (25) காலை நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்க ளுக்கு உறவுகள் மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலித்தனர். கடந்த 2004 டிச ம்பா் மாதம் 26 ஆம் திகதி காலை 9.25 நிமிடமளவில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ. ஆழத்தில், ரிக்டர் அளவில், 9.1 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து எழும்பிய ஆழிப்பேரலைகள் இந்தோனேஷியா, இந்தியா, மியான்மர், மலேஷியா, இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
இலங்கையை பொறுத்தமட்டில் இந்த ஆழிப்பேரலையனால் கரையோரப்பிர தேசங்கள் பாரிய சேதத்தை எதிா்கொண்டன. இலங்கையில் மட்டும் சுமாா் இலங்கையில் 35,000 பேர் ஆழிப்பேரலையனால் உயிரிழந்தமை குறிப்பி டத்தக்கது.
இந்நாளில் எமது இணையம் சார்பாக சுனாமிப் பேரலையில் காவு கொண்ட உறவுகள் அனைவருக்கும் எமது இதய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.