Breaking News

மீண்டும் ரயில் வேலை நிறுத்தமா? நாளை முடிவு கிடைக்கும்.

ஸ்ரீலங்கா எங்கும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய ரயில் வேலை நிறு த்தத்திற்கு காரணமான கோரிக்கைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா அமைச்ச ரவை மற்றுமொரு குழுவை அமைக்க அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

ஏற்கனவே இந்த விவகாரம் தொட ர்பில் குழு அமைக்கப்பட்டுள்ள நிலை யில், மேலுமொரு குழு அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தலைமை யில் உருவாக்கப்பட்டுள்ளது.  

கடந்த 6ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையான ஒருவார காலமாக ஸ்ரீலங்காவின் ரயில் இயந்திர சார திகள் பாரிய வேலை நிறுத்தப் போராட்ட மொன்றை நடத்தியுள்ளனர்.  ரயில் தொழில் சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணி மற்றும் ரயில் இயந்திர சார திகளின் சங்கம் உட்பட மேலும் சில தொழிற்சங்கங்கள் இணைந்து இப் போரா ட்டத்தை முன்னெடுத்திருந்தன.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நாளாந்த ரயில் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் பாதிக்கப்பட்ட அதேவேளை, ரயில் பயணிகள் பேரூந்து பயணத்தை மேற்கொண்டதால் வீதிப் போக்குவரத்தில் பெரும் நெரு க்கடி நிலைமை காணப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து நிலைமையை சமாளித்து பேச்சுவார்த்தை நடத்துவத ற்காக கடந்த 11ஆம் திகதி அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் குழு அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

 ரயில் இயந்திர சாரதி பதவிக்கான ஆட்சேர்ப்பு முறையில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தற்போது அரசாங்கத்தி னால் முன்னெடுக்கப்பட்டுவரும் முறையை எதிர்த்தும் இந்த வேலை நிறு த்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.   

இந்த நிலையில் தங்களது கோரிக்கை தொடர்பில் இதுவரை அர்த்தபுஷ்டி யான முடிவை அரசாங்கம் அறிவிக்கவில்லை என தெரிவிக்கின்ற ரயில் தொழிற் சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் செயலாளர் சம்பத் ராஜித, நாளைய தினம் அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான குழுவு டன் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.