கட்சித் தாவலுக்கு ஆயத்தமாகும் இலங்கை மக்கள் பிரதி நிதிகள் !
எதிர்வரும் வாரங்களில் இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு முக்கிய உறு ப்பினர்கள் கட்சித் தாவலுக்கு ஆயத்தமாகியுள்ளதாக நம்பகரமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ச தலைமையிலான ஒன்றிணை ந்த எதிரணியிலுள்ள மூத்த உறுப்பி னர் ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒரு வர் ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைந்திட ஆயத்தமாகி உள்ளதாக தெரி விக்கப்படுகின்றது. அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளத் தயாராகி வரு கின்ற ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள உறுப்பினருக்கு அமைச்சுப் பதவி ஒன்றும் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஒன்றிணைந்த எதிர்கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தன, அரசாங்கத்திடம் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளி யான தகவல் தொடர்பில் வினாவி இருந்த போதிலும் நாட்டை சர்வதேசத்தி டம் அடகு வைக்கின்ற ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சியுடன் தாம் இணையத் தயாரில்லை எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.