தேர்தலில் போட்டியிட பாலியல் இலஞ்சம் கோரவில்லையென மறுத்த - நாமல்
பெசில் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடுவதற்காக பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய விடய த்தை தாம் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புத ல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அப்படியொரு சம்பவம் நடைபெற்றி ருந்தால் பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் தாமரை மொட்டுச் சின்னத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டி யிட தன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக இலங்கை மாதா அமைப்பின் தலைவியான மதுஷா ராமசிங்க கொழும்பு – இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளரே, வேட்புமனுவைப் பெறுவதற்கு பாலியல் இல ஞ்சம் வழங்க வேண்டுமா? என்ற வாசகம் பதிக்கப்பட்ட பதாதையை ஏந்திய வாறு கறுப்பு ஆடையில் வந்த அவர் தனது அமைதிப் போராட்டத்தை முன்னெ டுத்துள்ளார்.
மேலும் இவ் விடயம் தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹி ந்த தேசப்பிரியவிடம் எழுத்து மூல முறைப்பாடு ஒன்றையும் நேற்றைய தினம் சமர்ப்பித்துள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடுவதற்கு தன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக பெண் ஒருவர் ஆர்ப்பாட்டம் செய்த விடயம் தொட ர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு தகவல் வழ ங்கியுள்ளார்.
இப்படியொரு சம்பவம் இடம்பெற்றிருக்காதென தனது நம்பிக்கை எனவும் எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் செல்லாமல் நேரடியாக பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அந்தப் பெண் முறையிடுவதே சாலவும் சிறப்பெனத் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக தாமரை மொட்டுச் சின்னத்திலுள்ளவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாக கைது செய்வார்கள் எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலை வரது செயற்பாடு சுயாதீனமானதா என்ற கேள்வி எம்மிடம் உள்ளது.
இன்று இந்த அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொருட்களை விநி யோகம் செய்கின்றது. இலஞ்சம் கொடுத்து வாக்குகளைப் பெறுகிறது. இல ஞ்சம் பெறுவது அரசாங்கமா அல்லது மொட்டுக் கட்சியா என்பதை மக்களிடம் சென்று கேளுங்கள்.
அவர்களுக்கு நன்கு தெரியும். அப்படியொரு பாலியல் இலஞ்சம் கோரினார்கள் என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் நிராகரிக்கின்றேன். மொட்டுக் கட்சியில் வேட்னுமனு கோருவதற்கு பலர் உள்ளனர்.
எவ்வாறாயினும் அந்தப் பெண்ணுக்கு அப்படியொரு அநீதி இழைக்கப்பட்டிரு ந்தால் தேர்தல் ஆணையாளரிடம் சொல்லாமல் பொலிஸாரிடத்தில் தெரிவி க்கும்படி நான் ஆலோசனை கூறுகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.