ஸ்ரீலங்கா அரசியல் களத்தில் ஜனவரி முதலாம் திகதி அதிரடி !
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஸ்ரீலங்கா அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழக்கூடும் என்று எதிர்வு கூறல் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கள தேசிய நாளிதழ் ஒன்றில் இன்று சனிக்கிழமை இதனை தகவ லாகத் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கி ய தேசியக் கட்சிக்கும் இடையில் 2015 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டாட்சி ஒப்பந்தம் எதிர்வரும் 31 ஆம் திகதி முடிவடையவுள்ளது. இத ற்கிடையில் கூட்டாட்சியில் இருந்து பிரிவதா அல்லது தொடர்ந்து இதனை முன்னெடுப்பதா என்ற இழுபறியில் இவ்விரு பிரதான கட்சிகளும் பேச்சு க்களை முன்னெடுத்த வண்ணமுள்ளனர்.
மேலும் சுதந்திரக் கட்சியிலுள்ள சிலர் கூட்டு அரசாங்கத்தில் இருந்து பிரிந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பொது எதிரணியுடன் இணை வது குறித்த பேச்சுக்களிலும் ஈடுபட்டுள்ளனர். இது இவ்வாறிருக்க, சில தமி ழ்க் கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் இரகசிய சந்திப்புக்களையும் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஸ்ரீலங்கா அரசியல் கள த்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாமென்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.