Breaking News

வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியைத் துறந்த - ஆனொல்ட்!

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இமானுவேல் ஆனொல்ட், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் பதவியை துறந்துள்ளார். 

தனது பதவி விலகல் கடிதத்தை வட க்கு மாகாண சபை உறுப்பினா் இமா னுவேல் ஆனொல்ட் கடந்த 14ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வழங்கிய தாக தமிழ் அரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்  தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (18) திங்கட்கிழமை ஆரம்பமாகிய நிலையில் எதிா்வரும் வியாழக்கி ழமை (21) நண்பகலுடன் நிறைவெய்தவுள்ளது. இந்நிலையில் வடக்கு மாகா ண சபை உறுப்பினர் இ. ஆனொல்ட் அந்தப் பதவியிலிருந்து விலகி யாழ்ப்பா ணம் மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதாக தெரிவி க்கப்பட்டுள்ளது. 

இதேவேளை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யவுள்ளதை முன்னிட்டு மாவ ட்டச் செயலகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.