பிரபாகரன் யுகம் மீண்டும் உருவாகும் அபாய நிலையாம் - ரோஹித அபேகுணவர்தன
அரசாங்கம் வடக்கில் ஒரு சட்டத்தையும் தெற்கில் மற்றுமொரு சட்டத்தையும் அமுல்படுத்துகின்றது. எனவே, இது மீண்டும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் யுகம் உருவாவதற்கு வழி வகையாக அமையுமென கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிப்பு.
கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கமைத்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்து ள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தெற்கு மக்கள் மத்தள விமான நிலையத்தைப் பாதுகாப்பதற்கு முன்னின்று செயற்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதேவேளை வடக்கில் தேசிய கொடியை ஏற்றுவதற்கும் இடமளிப்பதில்லை.
மாகாண சபை அமைச்சர் ஒருவரே தேசிய கொடியை ஏற்றமுடியாது எனக்குறிப்பிட்டுள்ளார். எனினும் அவருக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை இல்லை.
இதேவேளை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது தேசியக்கொடியில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக்கூறி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றனர்.
எனவே சட்டம் வடக்கில் ஒரு விதமாகவும் தெற்கில் மற்றுமொருவிதமாகவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே இது தொடர்பில் சகலரும் கவ னம் செலுத்த வேண்டியுள்ளது.
இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எதிராகவே கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட்டு வருகிறது. எமக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை.
நாம் கொள்கை ரீதியிலான தீர்மானத்திலேயே பயணிக்கிறோம்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்டுகிறது. இவ்வாறான நிலையில் தேர்தல் சட்டம் பேணப்பட வேண்டும். எனினும் வெற்றிடம் நிலவும் கிராமசேவகர் பிரிவுகளுக்கு கிராம சேவகர்களை நியமிப்பதற்கென போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டதுடன் பினனர் நேர்முகப்பரீட்சையும் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் அவர்களுக்கு நியமனம் வழங்காது, ஓய்வுபெற்ற கிராமசேவகர்களில் தெரிவுசெய்யப்பட்ட சிலரை மூன்று மாத காலாத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றுவதற்கு சேவையில் இணைத்துகொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவ்வாறு சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ள கிராம சேவகர்கள் தற்போது அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மாகாண சபை உறு ப்பினர்களின் செயாளர்களாக கடமையாற்றுகின்றனர். ஆகவே இது தொட ர்பில் நாளை (இன்று) தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.