முப்படையினரும் தயாராம் இராணுவ ஊடகப் பேச்சாளர் !
நாட்டில் ஏற்பட்டுள்ள சீறற்ற காலநிலையினால் அனர்த்தத்தின் மீட்பு நடவ டிக்கைகளுக்கும் நிவாரண ப்பணிகளுக்கும் நாட்டின் முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடெங்கிலும் இயற்கைச் சீரின்மை யால் நிகழத்தக்க அனர்த்தங்களில் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவா ரண நடவடிக்கைகள் குறித்து ஊடக ங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கை யில் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், விசேட பயிற்சி பெற்ற கமா ண்டோக்கள் மற்றும் மீட்பு அணிகள் 160 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரத்மலானை, காங்கேசந்துறை, ஹிங்குரா ங்கொட போன்ற விமானப்படை முகாம்களில் உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் உள்ளன.
மேலும் கடற்படையினரின் வள்ளங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளன. இதற்கமைவாக தத்தமது பிரதேசங்களில் நிகழும் அனர்த்தங்கள் குறித்து பொதுமக்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாமெனத் தெரிவித்துள்ளார்.