Breaking News

ஒப்பிரேசன் சக்சஸ் நோயாளி அவுட்-மென்வலு தொடர்பில் விக்கி(காணொளி)

கட்சிகளில் தலைவர்களின் தான்தோன்றித்தனம்
தொடர்பாகவும் மென்வலு தொடர்பாகவும் வடக்கு முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

யாழ் பத்திரிகையாளர்கள் சங்க விஜயத்தின் போது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு,  கூறிய வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தன்னை வன்போக்கு என சொல்பவர்கள் நான் தொடர்ந்தும் தேர்தலுக்கு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்தும் காப்பாற்றுவதாலேயே இப்படி சொல்கிறார்கள்.
நானும் மென்வலுவை பின்பற்றி தெற்கு அரசிற்கு ஆதரவாக செயற்பட்டால் தனிப்பட்ட வசதி வாய்ப்புக்களை பெருக்கி கொள்ள முடியும் என்பதோடு அமைச்சு பதவிகளையும் வகிக்க முடியுமே தவிர மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

உங்களுக்காக வீதியில் திரண்ட இளைஞர்களுக்கு என்ன சொல்கின்றீர்கள் எனக் கேட்டதற்கு உங்கள் எழிச்சியால்தான்முதலமைச்சராக என்னை தொடர்ந்து வைத்திருக்கிறீர்களோ அதேபோல தொடர்ந்தும் தயாராக இருங்கள் நேர்மையும் அர்ப்பணிப்புமுள்ள இளைஞர்களை உள்ளீர்க்ககூடிய காலம் விரைவில் வருமெனவும் தெரிவித்துள்ளார்.  

உங்கள் பகுதியை உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருக்கு இருக்கும் தகுதி நேர்மையும் திறமையும், அவர் ஊழலை வெறுப்பவராகவும் மக்களை நேசிப்பவராகவும் இருப்பதோடு அவர் எந்த கட்சி என்பது முக்கியமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல, ஊழலற்ற உயர்ந்த குணமுடைய ஒருவரைத் தேர்ந்தெடுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.