Breaking News

அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக இலங்கை வாக்­க­ளிப்பு.!

அமெ­ரிக்கா, இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேமை அங்­கீ­க­ரித்­த­மையை வாபஸ் பெற வேண்டும் என அழைப்பு விடுக்கும் தீர்­மானம் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையில் பெரும்­பான்மை வாக்­கு­களால் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. 

ஜெரு­ச­லேத்தின் நிலைப்­பாடு குறித்து எடுக்கப்­படும் எந்­த­வொரு தீர்­மா­னமும் செல்­லா­ததும் வலி­தற்­றதும் ஆகும் எனவும் அத்­த­கைய தீர்­மா­னங்கள் இரத்துச் செய்­யப்­பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் மேற்­படி தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்ள128 நாடு­களில் இலங்கை உள்­ள­டங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இலங்கை இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­சலேம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­மைக்கு ஏற்­க­னவே கண்­டனம் தெரி­வித்­தி­ருந்­தது. 

9 நாடுகள் ஐக்­கிய நாடுகள் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக வாக்­க­ளித்­துள்ள அதே­ச­மயம் 35 நாடுகள் இது தொடர்­பான வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­வதைத் தவி ர்த்­தி­ருந்­தன. அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாக்­கெ­டுப்பில் அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்கும் நாடு­க­ளுக்­கான நிதி­யு­த­வியைத் துண்­டிக்கப் போவ­தாக அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் ஐக்­கிய நாடுகள் தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வ­ளிக்கும் நாடு­க­ளுக்­கான நிதி­யு­த­வியை நிறுத்தப் போவ­தாக ட்ரம்ப் அச்­சு­றுத்தல் விடுத்­த­தை­ய­டுத்து இலங்கை உள்­ள­டங்­க­லான வளர்­முக நாடு­களின் அடுத்த கட்ட நகர்வு என்­ன­வாக இருக்கும் என்ற குழப்ப நிலை நில­விய சூழ்­நி­லையில் இலங்கை . இந்­தியா உள்­ள­டங்­க­லான அநே­க­மான வளர்­முக நாடுகள் அந்தத் தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளமை அந்தத் தீர்­மானம் தொடர்­பான பாரிய வெற்­றி­யொன்­றாகக் கரு­தப்­ப­டு­கி­றது. 

பல நாடுகள் தமது உள்­நாட்டு பிராந்­தி­யங்கள் தொடர்பில் அயல்­நா­டு­க­ளுடன் நிலவும் பிரச்­சி­னைக்கு ஜெரு­சலேம் தொடர்­பான அமெ­ரிக்­காவின் எதேச்­சை­யான அங்­கீ­காரம் பாத­க­மாக அமை­யலாம் என்று அச்சம் மற்றும் இஸ்ரேல் தொடர்­பான விரோத மனப்­பான்மை என்­பன கார­ண­மா­கவே அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் அச்­சு­றுத்­த­லையும் மீறி இந்தத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­துள்­ள­தாக நம்­பு­வ­தாக அர­சியல் அவ­தா­னிகள் கூறு­கின்­றனர். 

ஜெரு­ச­லேமை இஸ்­ரேலின் தலை­ந­க­ராக அங்­கீ­க­ரிக்க முடி­யாது என்ற ஐக்­கிய நாடுகள் சபையின் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக அமெ­ரிக்கா மற்றும் இஸ்­ரே­லுடன் இணைந்து மத்­திய அமெ­ரிக்க நாடு­க­ளான கௌத­மாலா, ஹொன்­டூரஸ், பசுபிக் பிராந்­திய நாடு­க­ளான மார்ஷல் தீவுகள், மைக்­ரோ­னே­சியா, நவுறு, பெலாவுக் குடி­ய­ரசு மற்றும் மேற்கு ஆபி­ரிக்க நாடான டோகோ என்­பன வாக்­க­ளித்­துள்­ளன.. 

இந்­நி­லையில் ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபையில் அமெ­ரிக்கா தவிர்ந்த நிரந்­தர அங்­கத்­துவ நாடு­க­ளா­க­வுள்ள சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்­தா­னியா ஆகிய நாடு­களும் ஐரோப்­பிய நாடுகள் மற்றும் அமெ­ரிக்க நட்­பு­றவு நாடுகள் உள்­ள­டங்­க­லான முஸ்லிம் உல­கி­லுள்ள நாடு­களும் அமெ­ரிக்­கா­விற்கு எதி­ரான மேற்­படி தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளன. 

 அதே­ச­மயம் அவுஸ்­தி­ரே­லியா, கனடா, மெக்­ஸிக்கோ, கொலம்­பியா, பூட்டான், பிலிப்பைன்ஸ், சொலமன் தீவுகள், தென் சூடான், உகண்டா, வணு­வத்து, ஹங்­கேரி, ஹெயிட்டி உள்­ள­டங்­க­லான 35 நாடுகள் மேற்­படி வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்­வதைத் தவிர்த்­தி­ருந்­தன. 

21 நாடுகள் இந்த வாக்­கெ­டுப்பின் போது ஆஜ­ரா­கி­யி­ருக்­க­வில்லை. இஸ்­ரே­லிய பலஸ்­தீன பிரச்­சி­னையின் மைய­மாக ஜெரு­சலேம் தொடர்­பான பிரச்­சினை இருந்து வரு­கி­றது. இஸ்­ரே­லா­னது ஜெரு­ச­லேமை தனது தலை­ந­க­ராக கருதி வரு­கின்ற நிலையில் பலஸ்­தீனம் கிழக்கு ஜெரு­ச­லேமை தனது எதிர்­காலத் தலை­ந­க­ராக உரி­மை­கோரி வரு­கி­றது. 

 இந்­நி­லை­யில்­அ­மெ­ரிக்க ஜனா­தி­பதி இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேமை அங்­கீ­க­ரித்­தமை பிராந்­திய சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­களை எது­வித தீர்வு எட்­டப்­ப­டாத நிலையில் முடி­வுக்கு கொண்டு வந்து அந்தப் பிராந்­தி­யத்தில் அமை­தி­யின்மை தோன்­று­வ­தற்கு வழி­வ­குக்கும் ஒரு நட­வ­டிக்­கை­யாக நோக்­கப்­ப­டு­கி­றது. 

இஸ்­ரே­லிய டெல் அவிவ் நக­ரையே அந்­நாட்டின் தலை­ந­க­ராக அங்­கீ­க­ரித்து உலக நாடுகள் தமது தூத­ர­கங்­களை அந்­ந­கரில் செயற்­ப­டுத்தி வரு­கின்ற நிலை யில் டொனால்ட் ட்ரம்ப் இஸ்­ரே­லுக்­கான அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை ஜெரு­ச­லே­மிற்கு நகர்த்­தப்­போ­வ­தாக அறி­விப்புச் செய்­தி­ருந்தார். 

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை 193 நாடு­களை அங்­கத்­த­வர்­க­ளாகக் கொண்ட ஐக்­கிய நாடுகள் சபை அவ­சரக் கூட்­ட­மொன்றைக் கூட்டி ஜெரு­சலேம் தொடர்­பான மேற்­படி முக்­கி­யத்­துவம் மிக்க வாக்­கெ­டுப்பை நடத்­தி­யது. 

இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேமை அங்­கீ­க­ரி­தி்­த­தற்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட தீர்­மா­ன­மொன்­றுக்கு அமெ­ரிக்கா தனது மறுப்­பாணை அதி­கா­ரத்தை (வீற்றோ அதி­காரம்) பயன்­ப­டுத்தி முட்­டுக்­கட்டை போட்­ட­தை­ய­டுத்து பலஸ்­தீ­னி­யர்­களால் மேற்­படி ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் அவ­சரக் கூட்­டத்­திற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. 

துருக்கி மற்றும் யேமனால் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த இந்தத் தீர்­மான வரைபில் அமெ­ரிக்கா தொடர்பில் எதுவும் பெயர் குறிப்­பிட்டுக் கூறப்­ப­ட­வில்லை என்ற போதும் ஜெரு­சலேம் தொடர்பில் அண்­மையில் எடுக்­கப்­பட்ட தீர்­மானம் ஆழ்ந்த கவ­லையைத் தரு­வ­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 

இந்­நி­லையில் இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­ஜமின் நெட்­டன்­யாஹு ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்­திற்கு கடும் கண்­டனம் தெரி­வித்­துள்ளார். அவர் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையை 'பொய்­களின் இல்லம்' எனக் குறிப்­பிட்டு குற்றம் சுமத்தியுள்ளார். 

அதே­ச­மயம் ஜெரு­சலேம் தொடர்பில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி வழங்­கிய ஆத­ர­வுக்கு நன்றி தெரி­வித்­துள்ள அவர், இஸ்­ரே­லுடன் இணைந்து உண்­மையின் பக்­க­மாக வாக்­க­ளித்த அனைத்து நாடு­க­ளுக்கும் நன்றி செலுத்­த­வ­தாக கூறி னார். இந்­நி­லையில் பலஸ்­தீன ஜனா­தி­பதி மஹ்மூத் அப்­பாஸின் பேச்­சாளர் கூறு­கையில், பலஸ்­தீ­னத்­துக்­கான ஒரு வெற்­றி­யாக இந்த வாக்­கெ­டுப்பு உள்­ள ­தாக தெரி­வித்தார். 

ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை­யி­லான மேற்­படி வாக்­கெ­டுப்­பிற்கு முன்னர் அங்கு உரை­யாற்­றிய அந்த சபைக்­கான அமெ­ரிக்கத் தூது­ரவர் நிக்கி ஹேலி, அமெ­ரிக்­காவின் தீர்­மானம் மேற்­படி பிரச்­சினை குறித்த இறு­தி­யான ஒன்­றென தவ­றாக எடுத்துக் கொள்­ளக்­கூ­டாது எனவும் இது பலஸ்­தீன, இஸ்­ரே­லிய பிரச்­சினை தொடர்­பான தீர்வு எதுவும் எட்­டப்­படும் பட்­சத்­தில்அ தனைத் தடுப்­ப­தாக அமை­யாது எனவும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். 

“இறை­மை­யுள்ள நாடு என்ற வகையில் எமது உரி­மையை செயற்­ப­டுத்­தி­ய­மைக்­காக ஐக்­கிய நாடுகள் சபையில் தனித்­து­வி­டப்­பட்ட இந்த நாளை அமெ­ரிக்கா ஞாப­கத்தில் வைத்­தி­ருக்கும்" என அவர் கூறினார். “ அமெ­ரிக்கா ஜெரு­ச­லேமில் தனது தூத­ர­கத்தைச் செயற்­ப­டுத்­த­வுள்­ளது. 

அதுவே நாம் செய்ய வேண்டும் என அமெ­ரிக்க மக்கள் விரும்­பு­வ­தாகும். அது . சரி­யான ஒன்­றாகும். ஐக்­கிய நாடுகள் சபை­யி­லான எந்­த­வொரு வாக்­கெ­டுப்பும் அதில் எந்­த­வொரு வேறு­பாட்­டையும் ஏற்­ப­டுத்­தாது" என நிக்கி ஹேலி தெரி­வித்தார். 

வாக்­கெ­டுப்­பிற்கு முதல்நாள் புதன்­கி­ழமை டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளி­யி­டு­கையில், அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து பல மில்­லி­யன்­க­ணக்­கான பணத்தை உத­வி­யாகப் பெறும் நாடுகள் அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக வாக்­க­ளிக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் அவ்­வாறு அந்­நா­டுகள் வாக்­க­ளிப்­பதால் அந்நாடுகளுக்கான நிதியுதவியை துண்டித்து அமெரிக்கா பெருந்தொகை பண த்தை சேமிக்கவே அது வழிவகை செய்யும் எனவும் அதனால் அமெரிக்கா வுக்கு எதிராக வாக்களிப்பவர்கள் தொடர்பில் தான் கவலைப்படப்போவ தில்லை எனத் தெரிவித்தார். 

இந்நிலையில் மேற்படி வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நாடுகளில் அநேகமானவை உலகின் மிகவும் வறிய நாடுகள் வரிசையில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.  

அதேசமயம் அதிகாரத்துவம் பொருந்திய அமரிக்காவின் நட்புறவு நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா என்பன மேற்படி வாக்கெடுப்பில் அமெரி க்காவுக்கு எதிராக வாக்களித்துள்ளமை டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு பாரிய அடியாகக் கருதப்படுகிறது. 

 இந்நிலையில் டொகால்ட் ட்ரம்பின் அடுத்த கட்ட நகர்வு என்னவாகவிருக்கும் என உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்படுகி றது.

- நன்றி - வீரகேசரி