தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப்போவதில்லையாம் - ரெலோ
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ தெரிவித்துள்ளது.
ஆசன பங்கீடு தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இத் தீர்மானம் எடுக்க ப்பட்டுள்ளது.
இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமை ப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசன பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நேற்று யாழ்ப்பாணம் மாட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இக் கூட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட குழுவினரும் புளொட் சார்பில் அக்கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் ரெலோ சார்பில் கட்சியின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தா அகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இக் கலந்துரையாடல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளு க்கிடையிலான ஆசன பங்கீடு தொடர்பாக முடிவுகள் எதுவும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது.
இதனையடுத்தே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி யுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை என்ற தீர்மானத்தை தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
இவ்வேளை ரெலோ கட்சி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேறொரு பங்காளிக்கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலை வர் சுரேஷ் .பிறேமச்சந்திரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.