
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலை மையிலான குழுவுக்கும் இடையில் மற்றுமொரு சந்திப்பு நடைபெறவு ள்ளது. இச்சந்திப்பு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இவ்விரண்டு அணிகளும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருந்தது. இந்நிலையிலேயே இன்றைய தினமும் மற்றுமொரு சுற்றுப் பேச்சு கொழும்பில் இடம்பெறவுள்ளது.