Breaking News

த.தே.ம.முன்னணி சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டிக்கு தயார் !

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 8 மாவட்டங்களிலும் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிட ஆயத்தமாகியுள்ளதாக பேச்சாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் கூட்டி ணைந்து போட்டியிடுவதாக தெரிவி க்கப்பட்ட நிலையில் தற்போது சுரேஸ் பிறேமச்சந்திரன் கூட்டணியு டன் இணைந்து போட்டியிடவுள்ள தாக தெரிவிக்கப்படும் நிலையில் முன்னணியின் நிலைப்பாடு தொட ர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  மேலும் தெரிவிக்கை யில்.... நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் தாயகப் பிர தேசத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது 8 மாவட்டங்களிலும் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடும். 

இதேநேரம் த.தே.ம. முன்னணியுடன் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளை யும் இணைந்து ஒன்றாக போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். இதேநேரம் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் மட்டுமன்றி இணைந்து போட்டியிடுவ தற்கு ஈ.பீ.ஆர்.எல்.எவ் கட்சியும் முன்வந்தால் அவர்களையும் இணைந்து போட்டியிடவும் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.