Breaking News

கேப்பாபுலவில் 133 ஏக்கர் காணி இன்று மக்களிடம் கையளிப்பாம் - டி.எம்.சுவா­மி­நாதன்

கேப்­பாப்பு­லவு மக்­க­ளின் 133 ஏக்கர் காணிகள் இன்று அவர்­க­ளி­டத்தில் மீளவும் கைய­ளிக்­கப்­படுமென சிறை ச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் தெரிவிக்கையில், 

தேசிய பாது­காப்புக் கருதி இலங்கைத் தரைப்­ப­டையின் பாது­காப்புப் படைத் தலை­மை­ய­க­மொன்­றாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­ வந்த கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லாளர் பிரிவின் கேப்­பா­பி­லவு கிரா­மத்தில் 133 ஏக்கர் காணிகளை விட்டு படைத் தலை­மை­ய­கத்தை இட­மாற்­று­வ­தற்கு அமைச்சின் ஊடாக 148 மில்­லியன் ரூபா இலங்கைத் தரைப்­ப­டைக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. 

அந்த அடிப்­ப­டையில், டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இக்­கா­ணி­களை அவற்றின் ஆரம்ப உரித்­தா­ளி­க­ளிடம் மீண்டும் கைய­ளிப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு பிர­தேச செய­லா­ள­ருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

290 நாட்­க­ளுக்கு மேல் தொடர்ந்த உண்­ணா­வி­ர­தத்தைக் கைவிட்டு அம்­மக்­க­ளு க்கு தமக்குச் சொந்­த­மான கணி­களைப் பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு தற்­போது அமைந்துள்ளது. 

2018 ஆம் ஆண்டில் அக்­கா­ணி­களில் 85 குடும்­பங்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­தற்கு அவ­சி­ய­மான அனைத்துச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுமெனத் தெரி வித்துள்ளார்.