தேர்தல் கடமையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடவில்லை - மஹிந்த தேசப்பிரிய!
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் எக்காரணத்தினாலும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்.
அது அதிக செலவை ஏற்படுத்தும் விடயமென்பதுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அத்துடன் நியாயமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்காக நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும்.
அத்துடன் தேர்தல் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதே இங்கு முக்கியமான விடயமாகும் எனத் தெரிவித்துள்ளார். தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை வைத்திராத எவருக்கும் வாக்களிப்பதற்கு அனுமதிக்க முடியாது.
அதேபோன்று வாக்களிப்பு நிலையத்திலிருந்து 400 மீற்றருக்கு எவரும் உட்புகாதவாரு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் இதேவேளை இம்முறை தேர்தலில் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டு ள்ளது.
ஆனால் அதனை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் சரியான முறை யில் முன்னெடுக்க முடியுமா என்பது கேள்விக்குரியாகியுள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டி யுள்ளார்.
தேர்தல் நடைமுறைகள் மற்றும் ஊடகங்கள் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து விளக்கமளிக்கும்போதே மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்.....
தேர்தல் பெப்ரவரிமாதம் 10 ஆம்திகதி இடம்பெறவுள்ள விடயம் அனைவரும் அறிந்த விடயமாகும். வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலை யில் தேர்தல் சட்டங்கள் இன்று முதல் (நேற்று) உரிய முறையில் அமுல்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நாளை இடம்பெறபோகின்றது என்ற செயற்பாட்டிலே அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். ஆனால் இங்கு வாக்காளர்கள் தெளிவடையவேண்டியதே மிக அவசியமானதாகும்.
நீதியான ஒரு தேர்தலை நடத்துவதற்கு பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். எனவே ஊடகங்கள் இவ் விடயத்தில் பொதுமக்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டும் என கோருகின்றோம். வாக்காளர்கள் தெளிவுபடுத்தப்படுவதிலேயே அனைத்தும் தங்கியுள்ளன.
ஊடகங்கள் தேர்தல் காலத்தில் நியாயமான முறையில் நடந்துகொள்ளவேண்டும்.
அனைத்து வேட்பாளர்களுக்கும் சம சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் அநீதியான முறையில் நடந்துகொள்ள கூடாது. ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோரின் அரசியல் உரைகள் தொடர்பாகவும் சம சந்த ர்ப்பம் வழங்கப்படவேண்டும்.
இம்முறை தேர்தல் புதிய முறையில் நடைபெறுவதால் இதுதொடர்பான தெளி வும் அவசியமாகின்றது. குறிப்பாக புதிய தேர்தல் முறைமையின் ஊடாக பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் உறுதிப்படுத்தவேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அந்தப் பொறுப்பு எமக்கே வழங்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இதனை சரியான முறை யில் முன்னெடுக்க முடியுமா என்பது கடினமான காரியமாகும். என்னைப் பொறுத்த வரையில் அனைத்து உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களிலும் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியாமல்போகும் என்றே கருதுகின்றோம்.
தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும்.
4.30 மணிக்கு வாக்குகளை எண்ண ஆரம்பித்துவிடுவோம். 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து அந்தந்த வாக்கு எண்ணும் நிலையங்களில் முடிவை அறிவிக்க முடியும். வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்கு எண்ணும் நடவடிக்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில்: அது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். தேசிய அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியான கடவுச்சீட்டு, முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மத குருக்களுக்கான அடையாள அட்டை, தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை ஆகியனவே தேர்தலுக்கு செல்லுபடியான அடையாள அட்டைகளாகும்.
கடந்த ஜனாதிபதி, மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் பயன்படுத்திய தற்காலிக அடையாள அட்டைகளை இம்முறையும் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆராய்கின்றோம்.
இதேவேளை இம்முறை தபால்மூல தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாது.
அனைத்து வாக்களிப்பு அட்டைகளும் ஒன்றாக சேர்த்தே எண்ணப்படும். மேலும் 10ஆம்திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 7ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பிரசாரப்பணிகள் முடிவடைந்துவிடும். அதன்பின்னர் பிரசாரப்பணிகளை முன்னெடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் வழக்குப்போடப்பட்டுள்ளதே?
பதில்: நாம் வேண்டுமென்றே எந்த வேட்புமனுவையும் நிராகரிக்கவில்லை. மாறாக குறைபாடுகள் காணப்பட்டவையே நிராகரிக்கப்பட்டன எனவே வழக்கு விசாரணையின்போது எமது பக்கத்தில் உறுதியாக இருப்போம். 93 சபைகளு க்கான வேட்புமனுத்தாக்கலின் போது 23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 248 சபைகளுக்கான வேட்புமனுவின்போது 29 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்ப ட்டன. மொத்தமாக 52 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பதில்: மொத்தமாக எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்ற விப ரத்தை உடனும் தெரிவிக்க முடியாது. மேலும் ஒவ்வொரு கட்சியும் எத்தனை சபைகளில் போட்டியிடுகின்றன என்பதை விரைவில் வெளியிட எதிர்பார்க்கி ன்றோம் எனத் தெரிவித்துள்ளார்.