Breaking News

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஹுஸைன் - பதவி விலகவுள்ளார் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹு ஸைன், தனது பதவியிலிருந்து அடுத்தாண்டு விலகவுள்ளார்.

இன்னுமொரு பதவிக்கால நீடிப்பைக் கோராமலேயே, விலகுவதாக தெரி விக்கப்பட்டுள்ளது. ஜோர்டானைச் சேர்ந்த இளவரசரும் முன்னாள் இராஜ தந்திரியுமான ஹுஸைன், 2014ஆம் ஆண்டு செம்டெம்பர் 1ஆம் திகதி, தனது பதவியை ஏற்றிருந்தார். 

ஒரு பதவிக்காலம், 4 ஆண்டுகள் என்பதோடு, இரண்டு தடவைகள் பதவி வகிக்க முடியும். ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட, அரச தலைவர்கள் பலருடனான முரண்பாடு கொண்ட ஹுஸைன், பூகோள அரசியல் நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு, இரண்டாவது தடவை யாகப் பதவி வகிப்பதற்கெதிரான முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளார். 

தனது முடிவை, தனது அலுவலக அதிகாரிகளுக்கு, மின்னஞ்சல் மூலமாக அவர் அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில் அவர், “விடயங்களைப் பற்றிச் சிந்தித்த பின்னர், இரண்டாவது நான்கு ஆண்டு காலப் பகுதியைக் கோருவ தற்கு எதிராக நான் முடிவெடுத்துள்ளேன். 

தற்போதுள்ள பூகோள அரசியல் நிலைமையில், அவ்வாறு இரண்டாவது தட வையாகப் பதவிக்குக் கோருவது, இரந்து கேட்பதாகவும், முன்னேற்றத்து க்கான கருத்துகளை மட்டுப்படுத்துவதாகவும், எனது குரலின் சுயாதீனத்தை யும் நற்பெயரையும் குறைப்பதாகவும் அமையும். 

எனது குரலென்பது, உங்கள் குரலாகும்” எனத் தெரிவித்துள்ளார். இரண்டாவது தடவையாக அவர் பதவிக்குக் கோரினாலும், ஐ.நா பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரத்தைக் கொண்ட ஐந்து நாடுகளும், ஹுஸைனுக்கான ஆத ரவை வழங்குமா என்பது, சந்தேகமானதாகும்.  

இந்த 5 நாடுகளுக்கு எதிராகவும், பெரும் விமர்சனங்களை, ஹுஸைன் முன்வைத்துள்ளார்.