வவுனியா நகரசபையை புறக்கணிக்கும் ரெலோ! முற்றாக ஒதுக்குவதாக ஆராய்வாம் - புளொட்!!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொட ர்பில் தமிழரசுக்கட்சியின் செயற்பாடு கூட்டாளிக் கட்சிகள் ரெலோ மற்றும் புளொட் குழப்ப நிலையில் தேர்த லைப் புறக்கணிப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தகவல் வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. வவுனியா நகரசபை வேட்பாளர் நியமனத்தில் தமிழரசுக்கட்சி விட்டுக்கொடுப்பை மேற்கொள்ளாமையினால் அச்சபையில் போட்டியிடுவதைத் தவிர்ப்பதற்கு ரெலோ முயற்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை வழ ங்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தாது தன்னிச்சையாக தமிழர சுக்கட்சி செயற்படுகின்றமையால் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் புறக்க ணிப்பது பற்றித் தாம் பரிசீலிப்பதாக புளொட் உயர் மட்டத்தினர் தெரிவித்து ள்ளனர்.