Breaking News

“தல புட்டுவா” வை சுட்டுக்கொன்ற ஐவர் கைது !

கல்கமுவ பிரதேசத்தில் "கல்கமுவே தல புட்டுவா" என அழைக்கப்படும் யானையைக்  கொன்றமை தொடர்பில் ஐந்து சந்தேகநபர்களை அம்பன்பொல பொலிஸார் கைது செய்துள்னர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து யானையின் தந்தம் மற்றும் யானைத் தந்தங்களை வெட்டுவதற்கு பயன்ப டும் வாள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்ப ட்டவர்கள் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.