அரசியல் கைதிகளின் நிபந்தனைகளை கருத்தில் எடுப்பாரா - சம்பந்தன்?
அரசியல் கைதிகளை விடுவிப்பதாக அரசாங்கம் உத்தரவாதமளிக்காவிடின் வரவு செலவுத் திட்ட மூன்றாம் கட்ட வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதர வாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கக்கூடாதென நிபந்தனை விதி க்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, எதி ர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பப்ப ட்ட கடிதத்தில் இவ் விடயம் எச்சரி க்கப்பட்டுள்ளது.
தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் அவர்களின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்க ப்பட்டுள்ள கடிதத்தில்,
தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு அரசி னால் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என கவனத்தில் எடுக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில், இக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் காணிகளில் தொடர்ந்தும் இராணுவம் நிலைகொண்டிருப்பது குறி த்தும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஜனாதிபதியை சந்தித்த போதும் இதுவரை தகுந்த பதில் கிடைக்கவில்லையென்பதை சுட்டிக்காட்ட ப்பட்டுள்ளது.