மட்டக்களப்பு வலைகளில் சிக்கியவை என்ன? – சமுத்திர சுற்றுச்சூழல் அதிகார சபை விளக்கம்!
மட்டக்களப்பு, கல்லடி கடற்பரப்பிலிருந்து, மீனவர்களின் வலைகளில் சிக்கு ண்ட பாம்புகள், கடற்பாம்புகள் அல்ல எனவும் அவை விலாங்கு மீன் இன த்தைச் சேர்ந்தவையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவை விலாங்கு மீன் இனத்தினைச் சேர்ந்த சேர்ந்த ஆங்கு இலா (Anguilla) என்ற மீனினமாகும் எனவும், சமு த்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது ஆணையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார தெரி வித்துள்ளார்.
ஆறுகள், ஏறிகள் மற்றும் களப்புகளில் வாழும் இந்த மீனினங்கள், தங்களது இனப்பெருக்கத்துக்காக, களப்புகளினூடாக கடலுக்குள் பிரவேசித்து, பாரிய தொகையாக ஒன்று திரண்டு முட்டையிடுவதாகவும் பின்னர், 2 மற்றும் 3 அங்குலம் நீளமான மீன் குஞ்சுகளாக அவை மீண்டும் களப்பினூடாக ஆறுகள் ஏறிகளைச் சென்றடைவதாகவும் அங்கேயே அவை தொடர்ந்து வளர்வதாக வும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இனப்பெருக்கத்துக்காக கடலுக்குச் செல்லும் இவ்வகை மீனினங்கள், கடலிலிருந்து தொலைதூரம் செல்வதால், அவை குறித்து கண்ட றிய முடிவதில்லையெனத் தெரிவித்துள்ள பேராசிரியர்,
இம்மீனினங்கள் பிடி பட்டமையானது, சுனாமியோ அல்லது வேறு ஏதேனும் அனர்த்தத்துக்கோ வழி வகுக்குமென கூறப்படும் செய்தியானது, வெறும் மூட நம்பிக்கையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.