Breaking News

உள்ளூராட்சி சபைகளுக்கான நிதிகளில் பாராபட்சம் !

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்க ப்படும் நிதிகளில் பாராபட்சம் காட்டப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். 

நிதி ஒதுக்கீட்டில் பாதிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி அதிக மாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டு மெனவும்  வலியுறுத்தியுள்ளார். 

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செல வுத் திட்டத்தின் உள்நாட்டு அலு வல்கள் அமைச்சிற்கான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுள்ளது.  இதில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பி னர் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்படும் நிதி களில் பாராபட்சம் காட்டப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.