1914 இல் மாயமான நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் மீட்பு !
முதலாம் உலகப்போரில் அவுஸ்திரேலிய கடற்படைக்கு உரித்தான நீர்மூழ்கி க் கப்பல் ஒன்று திடீரென காணாமல் போன நிலையில் இப்பொழுது அதன் பாக ங்கள் மீட்கப்பட்டுள்ளன என சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
குறித்த கப்பலின் உடைந்த பாகங்கள் 103 ஆண்டுகளுக்குப் பிறகு பப்புவா நியூகினியாவின் பார்க் தீவுகள் பகுதி யிலுள்ள கடலில் கண்டு பிடிக்கப்ப ட்டுள்ளன.
கடந்த 1914 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய கடற்படைக்கு உரி த்தான HMAS AE-1 என்ற நீர்மூழ்கிக் கப்பல் திடீரென காணாமல் போயு ள்ளது.
இதனால் குறித்த கப்பலில் பயணித்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் நீண்ட காலமாக கப்பல் தேடப்பட்டு வந்தது.
இதன்படி நீருக்குள் மூழ்கித் தேடும் ‘டிரோன்’ தொழிநுட்ப கருவிகளும் இத் தேடலில் பயன்படுத்த ப்பட்டன.
இந்த நிலையிலேயே அதன் பாகங்களை நீர்மூழ்கி வீரர்கள் கண்டு பிடித்து ள்ளனர். இதேவேளை குறித்த கப்பலில், அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலா ந்தின் கடற்படை வீரர்கள் 35 பேர் பயணித்திருந்துள்ளார்கள் எனத் தெரிவிக்க ப்பட்டுள்ளது.