தாயகத்தில் 294 ஆவது நாளாக போராடும் போரில் - எங்கே எம் உறவுகள் அரசே !
வடக்கு கிழக்கு தமிழா் தாயக பகுதி களில் வலிந்து காணாமல் போனவ ர்களின் உறவுகளின் போராட்டம் முடி வில்லாத நிலையில் தொடா்ந்தும் நடைபெற்றவாறு உள்ளது.
இந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல் லைத்தீவில் கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக 294 ஆவது நாளாக தொடர்ந்தும் நீண்டு செல்கின்றது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, இராணு வத்திடம் கையளித்த கைது செய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்ப ட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொட ர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போரா ட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் எங்கே எங்கள் உறவுகள் தீர்வைத் தாருங்கள் என தம்முயிரை மாய்ந்தவண்ணமும் மாய்க்கத் தயராகியும் வரு கின்ற நிலைமையை ஏன் அரசு கண்டு கொள்ளவில்லை.
இவர்களின் போராட்டத்துக்கு எந்தவித பதில்களும் கிடைக்காத நிலையில் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடோம் என உறவுகள் தெரிவி த்துள்ளனர்.
இதேவேளை இன்னும் நான்கு நாட்களில் 2018 ஆண்டும் பிறக்க வுள்ள நிலையில் மக்களின் கோரிக்கை தொடா்பில் உரிய தரப்பினா் எந்த முடிவினையும் எடுக்காத விடயத்தினால் மக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.